தமிழ் திருத்து யின் அர்த்தம்

திருத்து

வினைச்சொல்திருத்த, திருத்தி

 • 1

  (பேச்சு, எழுத்து ஆகியவற்றில் உள்ள) பிழைகளை நீக்கிச் சரிசெய்தல்.

  ‘அவர் என் ஆங்கில உச்சரிப்பைத் திருத்தினார்’
  ‘கட்டுரையில் எழுத்துப் பிழைகளை மட்டும் திருத்தினால் போதாது’

 • 2

  (தவறு செய்யும் அல்லது தவறான வழியில் செல்லும் ஒருவரை) நல்ல வழியில் நடக்கச் செய்தல்.

  ‘‘உன்னைத் திருத்தவே முடியாது’ என்று நண்பன் திட்டினான்’
  ‘குற்றவாளியைத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’

 • 3

  (தேர்வுத்தாளை) சரிபார்த்து மதிப்பிடுதல்.

  ‘விடைத்தாள்களை ஒரு வாரத்திற்குள் திருத்தி அனுப்ப வேண்டும்’

 • 4

  (சட்டம், தீர்மானம் முதலியவற்றை) திருத்தங்கள் செய்து மாற்றியமைத்தல்.

  ‘விற்பனை வரிச் சட்டத்தைத் திருத்த ஒரு குழு அமைக்கப்பட்டது’

 • 5

  (உடை, தலை முடி ஆகியவற்றை) சீர்படுத்துதல்; சீராக்குதல்.

  ‘முடி திருத்தும் நிலையம்’

 • 6

  (நிலத்தை) பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில் வெட்டியும் கொத்தியும் சீர்படுத்துதல்.

  ‘மனிதன் காட்டைத் திருத்தி நாடு நகரங்களை உருவாக்கினான்’