தமிழ் திருப்பம் யின் அர்த்தம்

திருப்பம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (பாதை, சாலை ஆகியவை) வளைந்து திரும்பும் இடம்; வளைவு.

  ‘தெருத் திருப்பத்திலேயே வருவது நீதான் என்று கண்டுபிடித்துவிட்டேன்’
  ‘எதிரெதிராக வந்த வண்டிகள் திருப்பத்தில் மோதிக்கொண்டன’

 • 2

  (இயல்பான போக்கு, வளர்ச்சி முதலியவற்றில் ஏற்படும் குறிப்பிடத் தகுந்த) மாற்றம்.

  ‘தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையில் திடீர்த் திருப்பம் ஏற்பட்டுள்ளது’
  ‘முப்பது வயதுக்குப் பின்தான் என் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டது’
  ‘நாவலின் இந்த இடத்தில் யாரும் எதிர்பார்த்திராத திருப்பமாகக் கதாநாயகன்தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது’