தமிழ் திருப்பு யின் அர்த்தம்

திருப்பு

வினைச்சொல்திருப்ப, திருப்பி

 • 1

  இருக்கும் நிலையிலிருந்து அல்லது செல்லும் திசையிலிருந்து மாற்றுதல்.

  ‘கழுத்து சுளுக்கிக்கொண்டதால் தலையைக் கொஞ்சம் கூடத் திருப்ப முடியவில்லை’
  ‘வண்டியை இடது பக்கம் திருப்பி நிறுத்தினார்’
  ‘வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீரைப் பாசனத்திற்குத் திருப்பத் திட்டம் தயாராகிறது’

 • 2

  மறுபக்கம் முன்புறம் வருமாறு அல்லது கீழ்ப்பக்கம் மேலே வருமாறு செய்தல்.

  ‘கல்லில் கிடந்த தோசையைத் திருப்பிப் போட்டாள்’
  ‘அனுப்பியவரின் முகவரியைப் பார்க்கக் கடிதத்தைத் திருப்பினான்’

 • 3

  (புத்தகம் போன்றவற்றின் பக்கத்தை) புரட்டுதல்.

  ‘வார இதழின் பக்கங்களை ஒவ்வொன்றாகத் திருப்பிப் பார்த்தேன்’

 • 4

  (குமிழ், கைப்பிடி முதலியவற்றை) திருகுதல்.

  ‘கம்பியை நுழைத்துத் திருப்பியவுடன் பூட்டு திறந்துகொண்டது!’
  ‘குமிழைத் திருப்பியவுடன் மின்விசிறி ஓட ஆரம்பித்தது’

 • 5

  (அடகு வைத்திருந்ததை அல்லது கொடுத்த பொருளை) மீட்டல்.

  ‘முதலையும் வட்டியையும் கொடுத்துவிட்டு இரு மோதிரங்களையும் திருப்பினான்’