தமிழ் திருமணம் யின் அர்த்தம்

திருமணம்

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும்) ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு; கல்யாணம்.

  ‘உன் மகளின் திருமணத்தை எங்கு வைத்திருக்கிறாய்?’
  ‘இன்றோடு எனக்குத் திருமணம் ஆகி இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றன’
  ‘ஓரினத் திருமணம் சில நாடுகளில் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கிறது’

 • 2

  கணவன் மனைவியாக வாழும் சமூக ஏற்பாடு.

  ‘திருமணங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது’
  ‘திருமணம் இப்போது பல மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டது’