தமிழ் திரும்ப யின் அர்த்தம்

திரும்ப

வினையடை

 • 1

  நிகழ்ந்ததே மீண்டும்; மறுபடி.

  ‘குழந்தைக்குத் திரும்பவும் காய்ச்சல் வரவில்லை’
  ‘ஒரே கனவு திரும்பத்திரும்ப வருகிறது’

 • 2

  மீண்டும் ஒரு முறை.

  ‘திரும்பச் சொல்கிறேன். நன்றாகக் கேள்’
  ‘செய்த தவறையே திரும்பவும் செய்கிறாய்’

 • 3

  திருப்பி.

  ‘பாத்திரத்தை எடுத்த இடத்தில் திரும்ப வைத்துவிடு’