தமிழ் திரும்பிப் பார் யின் அர்த்தம்

திரும்பிப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) கண்டுகொள்ளுதல்.

    ‘உன் வேலை ஆக வேண்டும் என்றால் மட்டும் நூறு முறை என் வீட்டுக்கு வருகிறாய். இல்லாவிட்டால் திரும்பிப் பார்க்கக்கூட மாட்டாய்’
    ‘நான் கஷ்டப்பட்ட காலத்திலெல்லாம் என் அண்ணன் தம்பி யாரும் என்னைத் திரும்பிப் பார்த்தது கிடையாது’
    ‘நம்மிடம் காசு, பணம் இருந்தால்தான் நாலுபேர் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள்’