தமிழ் திரும்பு யின் அர்த்தம்

திரும்பு

வினைச்சொல்திரும்ப, திரும்பி

 • 1

  புறப்பட்ட இடத்திற்கோ பழைய நிலைக்கோ வருதல் அல்லது செல்லுதல்.

  ‘சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினாள்’
  ‘போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள்’
  ‘அவர் அமெரிக்காவிலிருந்து நாளை திரும்புகிறார்’

 • 2

  இருக்கும் அல்லது செல்லும் திசையிலிருந்து மாறுபடுதல்.

  ‘அவரோடு பேசிக்கொண்டு நின்றவன் திடீரென்று என் பக்கம் திரும்பினான்’
  ‘அவர்கள் இடப்புறம் உள்ள சந்தில் திரும்பி வீட்டிற்குச் சென்றனர்’
  ‘ரயில் வளைவில் திரும்பும்போது வேகம் குறைந்தது’
  உரு வழக்கு ‘வழக்கு அவர் பக்கம் திரும்ப வாய்ப்பு உண்டு’