தமிழ் திருவிளையாடல் யின் அர்த்தம்

திருவிளையாடல்

பெயர்ச்சொல்

 • 1

  (புராணங்களில்) அடியவர்களுக்கு அருள்புரிவதற்காகவும் தீயவர்களைத் திருத்துவதற்காகவும் உலகில் சிவன் நிகழ்த்தியதாகக் கூறப்படும் செயல்கள்/பக்தர்களின் நன்மைக்காகக் கடவுள் நிகழ்த்தும் அற்புதம்.

  ‘கோபுரத்தின் மாடங்களில் இறைவனின் திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக அழகுற அமைக்கப்பட்டிருந்தன’
  ‘இது அம்மனின் திருவிளையாடல் என்று பக்தர்கள் கூறினர்’
  ‘இது முருகனின் திருவிளையாடல் என்று அறிந்ததும் முனிவர் மகிழ்ச்சியுற்றார்’

 • 2

  விஷமச் செயல்.

  ‘அவர் ஏதோ ஒரு திருவிளையாடல் புரிந்து என்னை இந்தக் குக்கிராமத்துக்கு மாற்றிவிட்டார்’