தமிழ் திருஷ்டிப் பரிகாரம் யின் அர்த்தம்

திருஷ்டிப் பரிகாரம்

பெயர்ச்சொல்

 • 1

  திருஷ்டிபடுவதால் உண்டாகும் தீங்கை நீக்குவதற்குச் செய்யும் மாற்று.

  ‘குழந்தைக்குத் திருஷ்டிப் பரிகாரப் பொட்டு வைத்தாள்’
  ‘கடைக்குத் திருஷ்டிப் பரிகாரமாக யாளி முகம் வைக்கப்பட்டிருந்தது’

 • 2

  விதிவிலக்காக இருந்து (ஒருவரின் அல்லது ஒன்றின்) சிறப்புக்குக் குறை உண்டாக்குபவர் அல்லது உண்டாக்குவது.

  ‘எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள். திருஷ்டிப் பரிகாரமாக இருப்பது என் கடைசித் தம்பி மட்டும்தான்’
  ‘எங்கள் பள்ளிக்குத் திருஷ்டிப் பரிகாரமாகப் பக்கத்தில் ஒரு பாழடைந்த கட்டடம்’