திரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரை1திரை2திரை3

திரை1

வினைச்சொல்திரைய, திரைந்து, திரைக்க, திரைத்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (பால்) திரிதல்.

திரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரை1திரை2திரை3

திரை2

வினைச்சொல்திரைய, திரைந்து, திரைக்க, திரைத்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (கட்டியிருக்கும் ஆடையைத் தேவையான அளவுக்கு மடிப்புமடிப்பாக) சுருக்கி உயர்த்துதல்.

  ‘வேட்டியைத் திரைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான்’

திரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திரை1திரை2திரை3

திரை3

பெயர்ச்சொல்

 • 1

  (ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவோ அறை, மேடை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும்) தைக்கப்பட்ட துணி.

  ‘கூடத்தைத் திரை போட்டுத் தடுத்து ஒரு பாதியைச் சாப்பாட்டு அறையாகப் பயன்படுத்துகிறோம்’
  ‘திரை விலகியதும் நாடகம் துவங்கியது’

 • 2

  (திரையரங்கம், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி ஆகியவற்றில்) படமோ எழுத்தோ தெரியும் துணி, கண்ணாடி, பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன பரப்பு.

  ‘இந்தக் கணினியின் திரை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது’
  உரு வழக்கு ‘அவள் நினைவு மனத் திரையில் தோன்றி மறைந்தது’

 • 3

  (பெரும்பாலும் பெயரடையாக) திரைப்படத் துறை.

  ‘திரையுலகில் எனக்கு நண்பர்கள் அதிகம்’
  ‘திரை நட்சத்திரங்கள்’
  ‘திரைச் செய்தி’