தமிழ் திறன் யின் அர்த்தம்

திறன்

பெயர்ச்சொல்

 • 1

  திறமை.

  ‘சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட அதிகாரி’
  ‘என்னுடைய திறனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு’
  ‘மாணவர்களின் மொழித் திறனை வளர்க்கத் தகுந்த திட்டங்கள் தேவை’

 • 2

  ஆற்றல்; சக்தி.

  ‘கற்பனைத் திறன்’
  ‘மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது’

 • 3

  இயற்பியல்
  இயந்திரம், சாதனம் போன்றவற்றால் செய்யக்கூடியதாக இருக்கும் வேலையின் அல்லது இயக்கத்தின் வரையறுக்கப்பட்ட, அதிகபட்சமான அளவு; சக்தி.

  ‘இந்தப் பளுதூக்கியின் திறன் எவ்வளவு?’