தமிழ் திறமை யின் அர்த்தம்

திறமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செயல்பாட்டுத் திறன்.

    ‘உன் திறமையைச் செயலில் காட்டு’
    ‘பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளை அமைச்சர் திறமையாகச் சமாளித்தார்’
    ‘அவர் தன்னுடைய திறமையான வாதத்தினால் வழக்கை வென்றார்’