தமிழ் திளை யின் அர்த்தம்

திளை

வினைச்சொல்திளைக்க, திளைத்து

 • 1

  (ஒன்றில் மூழ்கி) சுகம் அனுபவித்தல்.

  ‘ஆற்று நீரில் மூழ்கித் திளைத்து மகிழ்ந்தோம்’
  ‘அவர்களது அன்பான உபசாரங்களில் திளைத்தேன்’
  ‘பழங்கால மரபில் ஊறித் திளைத்தவர்களுக்கு நவீனப் போக்குகள் திருப்தி அளிப்பதில்லை’

 • 2

  (மோசமான சூழலில்) உழல்தல்.

  ‘அறியாமையிலும் சஞ்சலத்திலும் திளைப்பவர்கள்’
  ‘ஊழலில் ஊறித் திளைத்தவர்களுக்கு அதை விட்டு வெளியே வர மனமிருப்பதில்லை’