தமிழ் திவ்யம் யின் அர்த்தம்

திவ்யம்

(திவ்வியம்)

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

 • 1

  உயர் வழக்கு தெய்வீகத் தன்மை.

  ‘பக்திப் பாடல்களைக் கேட்கும்போது ஒரு திவ்யமான உணர்ச்சி மனத்தில் ஏற்படுவதை அவரால் உணர முடிந்தது’

 • 2

  அருகிவரும் வழக்கு சிறப்பு; அருமை.

  ‘சாப்பாடு திவ்யமாக இருந்தது’
  ‘திவ்யமான இசைக் கச்சேரி’