தமிழ் திவலை யின் அர்த்தம்

திவலை

பெயர்ச்சொல்

 • 1

  (திரவத்தின்) துளி.

  ‘சூரிய ஒளியில் மின்னிய நீர்த் திவலை’
  ‘கடல் நீரில் எண்ணெய்த் திவலைகள் மிதந்துகொண்டிருந்தன’
  ‘அவருடைய கண்களில் நீர்த் திவலைகள்’
  ‘காற்றின் வேகம் கடல் நீரைத் திவலைகளாக வாரி அடித்தது’
  ‘மழைத் திவலை’