தமிழ் தீர்த்தம் யின் அர்த்தம்

தீர்த்தம்

பெயர்ச்சொல்

 • 1

  புனிதத் தலங்களிலுள்ள ஆறு, குளம் முதலிய நீர்நிலை அல்லது அவற்றின் நீர்.

  ‘காவிரித் தீர்த்தத்தில் குளித்துவிட்டுக் கோவிலுக்குப் போனார்’
  ‘காசித் தீர்த்தத்தைப் பூஜை அறையில் வை’

 • 2

  (கோயில்களில் வழங்கப்படும்) அபிஷேக நீர்.

  ‘வலது கையைக் குழித்துத் தீர்த்தம் வாங்கித் தலையில் தெளித்துக்கொண்டார்’

 • 3

  சமூக வழக்கு
  தண்ணீர்.

  ‘குடிக்கக் கொஞ்சம் தீர்த்தம் கொடுங்கள்’