தமிழ் துக்கடா யின் அர்த்தம்

துக்கடா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (அளவில்) சிறியது; துணுக்கு.

  ‘இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியைப் பற்றிக் கடைசிப் பக்கத்தில் துக்கடாவாகப் போட்டிருக்கிறார்களே!’
  ‘பத்திரிகையில் முதலில் முக்கியச் செய்திகளைப் படித்துவிட்டுக் கடைசியாகத் துக்கடாச் செய்திகளைப் படிக்க ஆரம்பித்தேன்’

 • 2

  பேச்சு வழக்கு (மதிப்பில்) முக்கியமற்றது/முக்கியமற்றவர்.

  ‘இந்தத் துக்கடா விஷயத்துக்கு மனசைப் போட்டு அலட்டிக்கொள்ளாதே’
  ‘துக்கடாப் பயல்களெல்லாம் இன்று நம்மை எதிர்த்துப் பேசுகிறார்கள்’

 • 3

  இசைத்துறை
  பேச்சு வழக்கு (கச்சேரிகளில் பெரும்பாலும் இறுதிப் பகுதியில்) பாடப்படும் அல்லது வாசிக்கப்படும் சிறுசிறு உருப்படிகள்.

  ‘நேற்றைய நிகழ்ச்சியில் பாடகர் வடநாட்டு சங்கீதத்தில் அமைந்த சில துக்கடாக்களையும் வழங்கினார்’
  ‘தமிழ்நாட்டில் நடக்கும் கச்சேரிகளில் தமிழ் மொழிப் பாடல்கள் துக்கடா என்ற வகையில் கச்சேரியின் இறுதியில் இடம்பெறும் நிலை மாறிக்கொண்டுவருகிறது’