தமிழ் துக்கம் யின் அர்த்தம்

துக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  துயர உணர்வு; துன்பம்.

  ‘துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினான்’
  ‘சுகம், துக்கம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்’

 • 2

  பேச்சு வழக்கு மரணம் நிகழ்ந்த வீடு; துக்கம் அனுசரிக்கும் காலம்.

  ‘அப்பா துக்கத்துக்குப் போயிருக்கிறார்; சாயந்திரம்தான் வருவார்’
  ‘செத்துப்போனது பங்காளி என்பதால் எங்களுக்கு ஒரு வருடம் துக்கம் உண்டு’