தமிழ் துக்கிரி யின் அர்த்தம்

துக்கிரி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மனத் துயரம் விளைவிக்கும் வகையில்) கெடுதல் அல்லது விரும்பத் தகாதது நிகழலாம் என்று உணர்த்தும் விதமான அமங்கலத் தன்மை.

    ‘‘திடீரென்று நான் இறந்துவிட்டால் என்ன செய்வாய்?’ என்று கேட்டதற்கு ‘எதற்கு இந்தத் துக்கிரிப் பேச்சு’ என்று கடிந்துகொண்டாள்’

  • 2

    வட்டார வழக்கு கெடுதல், துரதிர்ஷ்டம் விளைவதற்குக் காரணமாகக் கருதப்படும் நபர்.

    ‘இந்தத் துக்கிரி பிறந்ததிலிருந்து வியாபாரத்தில் பயங்கர நஷ்டம்’