தமிழ் துச்சம் யின் அர்த்தம்

துச்சம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    ஒரு பொருட்டாகக் கருதப்படாத, முக்கியத்துவமற்ற ஒன்று; அற்பம்.

    ‘அவர் தன் பதவியைத் துச்சமாக நினைத்து ராஜினாமாசெய்தார்’
    ‘படை வீரர்கள் தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போரிட்டனர்’
    ‘இந்தப் பணம் அவனுக்குத் துச்சம்’