தமிழ் துடிப்பு யின் அர்த்தம்

துடிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு/(அதிர்ச்சியால் ஏற்படும்) தவிப்பு.

  ‘அம்மாவை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற அவளுடைய துடிப்பை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது’
  ‘செய்தியைக் கேட்டதும் அவனிடம் உண்டான துடிப்பும் பதற்றமும் பிறரைப் பயப்படவைத்தன’

 • 2

  ஆர்வத்தைக் காட்டி இயங்கும் சுறுசுறுப்பு.

  ‘எண்பது வயதிலும் எவ்வளவு துடிப்பாக இருக்கிறார்!’
  ‘துடிப்பான இளைஞன்’
  ‘இளமையின் துடிப்பு’
  ‘சாதனை புரிய வேண்டும் என்ற இலட்சியத் துடிப்பு அவளிடம் காணப்பட்டது’
  ‘ராணுவ வீரர்களுக்கு இணையாக எல்லா ஆயுதங்களையும் கையாளும் துடிப்பு மிக்க வீரர்கள் அதிரடிப்படையில் உள்ளனர்’

 • 3

  (ஒன்று சுருங்கி விரிவதால் அல்லது ஒன்றில் ஏற்படும் ஓட்டத்தினால்) விட்டுவிட்டு ஏற்படும் அசைவு.

  ‘ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போதும் தமனிகளில் துடிப்புகளை உணரலாம்’
  ‘மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அப்பாவின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது’