துடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துடை1துடை2

துடை1

வினைச்சொல்துடைக்க, துடைத்து

 • 1

  (ஈரம், அழுக்கு முதலியவற்றை) தேய்த்து நீக்குதல்.

  ‘சட்டையில் விழுந்த எச்சத்தை அருவருப்போடு துண்டால் துடைத்துக்கொண்டார்’
  ‘வீட்டைத் தண்ணீரால் துடைத்துக்கொண்டிருந்தாள்’
  ‘சாப்பிட்டுவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்’

 • 2

  (கரும்பலகை, சிலேட்டு முதலியவற்றில் எழுதியிருப்பவற்றை) மறைந்து போகும்படி செய்தல்; அழித்தல்.

  ‘ஆசிரியர் கரும்பலகையைத் துடைத்துவிட்டு அடுத்த படத்தைப் போட்டுக் காட்டினார்’

 • 3

  (கவலை, துன்பம் முதலியவற்றை) போக்குதல்.

  ‘ஏழைகளின் துயர் துடைக்க அரசு பல புதிய திட்டங்களைத் தீட்டியுள்ளது’

 • 4

  (பணம், உணவு, பொருள் முதலியவற்றை) தீர்த்தல்; காலி செய்தல்.

  ‘வங்கியிலிருந்த பணம் முழுவதையும் துடைத்து எடுத்துவிட்டான்’

துடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துடை1துடை2

துடை2

பெயர்ச்சொல்