தமிழ் துண்டி யின் அர்த்தம்

துண்டி

வினைச்சொல்துண்டிக்க, துண்டித்து

 • 1

  (ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ) தொடர்பற்றதாக ஆக்குதல்.

  ‘விபத்தில் பாதிக்கப்பட்ட கால்களைத் துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட்டார்’
  ‘கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பி துண்டிக்கப்பட்டது’
  ‘வெள்ளத்தால் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டிருந்தன’

 • 2

  (ஒன்றின் பகுதியாக இருப்பதை) தனித்தனிப் பகுதிகளாக ஆக்குதல்.

  ‘வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன’

 • 3

  (அளிக்கப்பட்டுவரும் தொலைபேசி அல்லது மின்சாரம் போன்ற சேவை) நிறுத்தப்படுதல்.

  ‘கட்டணம் கட்டாததால் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள்’
  ‘வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது’

 • 4

  (உறவு, தொடர்பு போன்றவற்றை) முறித்துக்கொள்ளுதல்.

  ‘சிறு பிரச்சினைக்காக அண்டை நாட்டுடன் உள்ள ராஜிய உறவைத் துண்டித்துக்கொள்வதா?’