தமிழ் துண்டு யின் அர்த்தம்

துண்டு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முழுதாக இருக்கும் ஒன்றிலிருந்து நறுக்குதல், வெட்டுதல், அரிதல் போன்ற செயல்களின் மூலம் கிடைக்கும் சிறிய பகுதி.

  ‘அலமாரி ஆடாமல் இருக்கக் கீழே ஒரு மரத் துண்டை வைத்தான்’
  ‘இறைச்சியைத் துண்டுதுண்டாக நறுக்கி வைத்தாள்’
  ‘மாம்பழத்தில் எனக்கும் ஒரு துண்டு கொடு’

 • 2

  (பீடி போன்றவற்றைக் குறிக்கும்போது) உபயோகப்படுத்தியது போக எஞ்சியிருக்கும் சிறு பகுதி.

  ‘பெட்டிக்கடைக்கு முன் நிறைய சிகரெட் துண்டுகள் கிடந்தன’

 • 3

  சிறிய அளவு.

  ‘துண்டு நிலம்’
  ‘துண்டுக் காகிதம்’
  ‘துண்டுச் சீட்டு’

தமிழ் துண்டு யின் அர்த்தம்

துண்டு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (துடைக்க, துவட்டப் பயன்படும்) செவ்வக வடிவத் துணி.

  ‘இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளிக்கப்போனார்’
  ‘துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு தோட்ட வேலையில் இறங்கினார்’