துணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துணி1துணி2

துணி1

வினைச்சொல்துணிய, துணிந்து

 • 1

  (பயமோ தயக்கமோ இல்லாமல் ஒன்றைச் செய்ய) தைரியம் கொள்ளுதல்/தைரியத்துடன் (ஒன்றை) எதிர்கொள்ள அல்லது செய்ய முன்வருதல்.

  ‘பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சாட்சி சொல்ல எவரும் துணிவதில்லை’
  ‘வருவது வரட்டும் என்று துணிந்து சொந்தமாகத் தொழிலை ஆரம்பித்துவிட்டேன்’
  ‘காதல் கடிதம் எழுதித் துணிந்து பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கொடுத்துவிட்டான்’

துணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துணி1துணி2

துணி2

பெயர்ச்சொல்

 • 1

  (உடை தைக்க அல்லது விரிப்பு, போர்வை போன்றவையாகப் பயன்படுத்த) பருத்தி, கம்பளி, பட்டு முதலியவற்றின் நூலால் அல்லது செயற்கை இழையால் நெய்யப்பட்ட பொருள்.

  ‘மகளின் பிறந்தநாளுக்குப் புதுத் துணி எடுக்க வேண்டும்’
  ‘மெத்தை விரிப்பு தைக்கத் துணி வாங்கியிருக்கிறேன்’
  ‘துணிக் கடை’

 • 2

  (பெரும்பாலும் பன்மையில்) தைக்கப்பட்ட உடை, பயன்படுத்தும் விரிப்பு முதலியவை.

  ‘சலவைக்குப் போட்ட துணிகளை வாங்கிவிட்டாயா?’
  ‘துவைத்த துணிகளைக் காயப்போடு’