தமிழ் துணிச்சல் யின் அர்த்தம்

துணிச்சல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கடினமான அல்லது ஆபத்து நிறைந்த செயலைத் துணிந்து செய்யும் தன்மை; துணிவு.

  ‘‘சண்டையை நிறுத்திச் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்’ என்று ராணுவத் தளபதி துணிச்சலாகக் கூறியுள்ளார்’
  ‘அவரை எதிர்க்க எனக்குத் துணிச்சல் இல்லை’

 • 2

  துணிகரம்.

  ‘துணிச்சலான கொள்ளை’