தமிழ் துணுக்குறு யின் அர்த்தம்

துணுக்குறு

வினைச்சொல்துணுக்குற, துணுக்குற்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (எதிர்பாராமல் ஒன்று நடந்துவிட்டதால்) திடுக்கிடுதல்.

    ‘கழுத்தைத் தடவியபோது சங்கிலி இல்லாததை உணர்ந்து துணுக்குற்றாள்’
    ‘பூங்காவில் முகம் தெரியாத ஒருவனுடன் தன் தங்கை அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் மனம் துணுக்குற்றது’