துணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துணை1துணை2

துணை1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு செயலை நிறைவேற்றுவதற்கு) உதவி; ஆதரவு.

  ‘கல்யாண வேலைகளைக் கவனிப்பதில் இவர் எனக்குத் துணையாக இருந்தார்’
  ‘குற்றம் செய்தவர்கள் தப்பி ஓடத் துணையாக இருப்பதும் குற்றமாகும்’
  ‘கிடைக்கும் சான்றுகளின் துணை கொண்டு இது உண்மை என நிறுவலாம்’

 • 2

  (ஒருவருக்கு) ஆதரவாகவோ பாதுகாப்பாகவோ இருப்பவர்.

  ‘பெண் துணை இல்லாமல் தனியாக வாழ முடியாதா?’
  ‘அப்பா ஊருக்குப் போயிருப்பதால் வீட்டில் பாட்டிக்குத் துணையாக மாமா இருக்கிறார்’

 • 3

 • 4

  கடவுளின் அருளை வேண்டி கடிதம், விளம்பரப்பலகை முதலியவற்றில் கடவுளின் பெயரோடு சேர்த்து எழுதப்படும் சொல்.

  ‘அப்பா ‘முருகன் துணை’ என்று முதலில் எழுதி விட்டுத்தான் பிற செய்திகள் எழுதத் தொடங்குவார்’

துணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துணை1துணை2

துணை2

பெயரடை

 • 1

  (ஒரு பதவிக்கான பொறுப்பில்) முதல் நிலைக்கு அடுத்த அல்லது முதல் நிலைக்கு வரக்கூடிய; உதவி.

  ‘துணை இயக்குநர்’
  ‘துணைப் பேராசிரியர்’

 • 2

  முதன்மையாக அமைவதன் வரம்புக்கு உட்பட்டுத் தனியாக இருக்கும்.

  ‘சட்டசபையில் துணைக் கேள்விகளுக்கும் அமைச்சர் பதில் அளித்தார்’
  ‘வங்கிச் சட்டத்தில் சில துணை விதிகளைத் திருத்தம் செய்யத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது’

 • 3

  (திரைப்படத்தில், நாடகத்தில்) முக்கியப் பாத்திரம் அல்லாத.

  ‘துணை நடிகை’
  ‘துணைப் பாத்திரம்’

 • 4

  (தொழிலைக் குறிக்கும்போது) மேல்வருமானத்துக்காகச் செய்யும்; உப.

  ‘கிராமங்களில் கோழி வளர்ப்பு துணைத் தொழிலாக இருக்கிறது’