தமிழ் துணைநில் யின் அர்த்தம்

துணைநில்

வினைச்சொல்-நிற்க, -நின்று

  • 1

    உதவியாகவும் ஆதரவாகவும் இருத்தல்.

    ‘‘நாட்டின் ஒற்றுமைக்குத் துணைநிற்போம்’ என்று உறுதி எடுத்துக்கொண்டனர்’
    ‘அவருக்கு வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டபோது நண்பர்கள்தான் துணைநின்றனர்’
    ‘அரசின் இந்தப் புதிய முயற்சிக்கு நாம் துணைநிற்க வேண்டும்’