தமிழ் துணை வினை யின் அர்த்தம்

துணை வினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  முதன்மை வினையின் ‘செய’ அல்லது ‘செய்து’ என்னும் வடிவங்களை அடுத்து வந்து முதன்மை வினை குறிக்கும் செயலின் தன்மையை வெளிப்படுத்தும் வினை.

  ‘‘நான் கடிதம் எழுதிவிட்டேன்’ என்பதில் ‘விட்டேன்’ என்பது துணை வினை’

 • 2

  இலக்கணம்
  சில பெயர்ச்சொற்களோடு இணைந்து அவற்றை வினைச்சொல்லாக்கும் வினை.

  ‘‘கோபப்படு’ என்ற வினைச் சொல்லில் வரும் ‘படு’ ஒரு துணை வினை ஆகும்’