வினைச்சொல்
- 1
ஒரு நிகழ்ச்சி, வழிபாடு, படைப்பு ஆகியவற்றின் தொடக்கத்தில் இறைவன் அருளை வேண்டிப் பாடுதல்; வழிபடுதல்.
‘அக்காலத்தில் புலவர்கள் கலைமகளைத் துதித்து ஒரு பாடல் இயற்றுவது வழக்கம்’‘கர்த்தரின் மகிமையைத் துதித்து ஜெபம் செய்தார்’
பெயர்ச்சொல்
- 1
ஒரு நிகழ்ச்சி, வழிபாடு, படைப்பு ஆகியவற்றின் தொடக்கத்தில் இறைவன் அருளை வேண்டிப் பாடும் பாடல்.
‘கலைமகளுக்கும் விநாயகருக்கும் முதலில் துதி சொல்வோம்’