தமிழ் துப்பு யின் அர்த்தம்

துப்பு

வினைச்சொல்துப்ப, துப்பி

 • 1

  (வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை) விசையுடன் வெளியே தள்ளுதல்.

  ‘‘இங்கே எச்சில் துப்பக் கூடாது’ என்று ஓர் அறிவிப்புப் பலகை தொங்கியது’
  ‘கரும்பைத் தின்று சக்கையை வழியெல்லாம் துப்பிவைத்திருக்கிறார்களே!’
  ‘மருந்து கசப்பாக இருந்ததால் குழந்தை துப்பிவிட்டது’

தமிழ் துப்பு யின் அர்த்தம்

துப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம்.

  ‘இந்தச் சாதாரண வேலையைச் செய்யக்கூட உனக்குத் துப்பு இல்லை’
  ‘மனைவியை வைத்துக் காப்பாற்ற அவனுக்கு ஏது துப்பு?’

தமிழ் துப்பு யின் அர்த்தம்

துப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்) தடயம் அல்லது தகவல்.

  ‘கொலையைப் பற்றித் துப்பு சொன்னவருக்குப் பரிசு கொடுக்கப்பட்டது’
  ‘அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களில் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று ஆராய்ந்தார்’