தமிழ் துப்புரவு யின் அர்த்தம்

துப்புரவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (இடம், பொருள் முதலியவற்றின்) சுத்தம்; தூய்மை.

  ‘மண் குடிசையாக இருந்தாலும் துப்புரவாக இருந்தது’
  ‘அவர் வீட்டை எப்போதும் துப்புரவாக வைத்திருப்பார்’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) பணியின் காரணமாகத் தெரு, அலுவலகம் போன்ற பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருத்தல்.

  ‘துப்புரவுப் பணி’
  ‘துப்புரவுத் தொழிலாளர்’