தமிழ் துயரம் யின் அர்த்தம்

துயரம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  துன்ப உணர்வு அல்லது நிலை; சோகம்.

  ‘பழைய நினைவுகளைக் கதையாகச் சொல்வதில் மிகுந்த துயரத்தை உணர்கிறேன்’
  ‘துயரக் கடலில் மூழ்கினாள்’
  ‘அவள் குரலில் துயரம் நிறைந்திருந்தது’
  ‘வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம்’
  ‘பிறர் துயரத்தைப் போக்க வேண்டும் என்ற அக்கறை யாருக்கும் இல்லை’