தமிழ் துரத்து யின் அர்த்தம்

துரத்து

வினைச்சொல்துரத்த, துரத்தி

 • 1

  (பிடிப்பதற்காக) ஓடிப் பின்தொடர்தல்.

  ‘திருடனை இரண்டு காவலர்கள் துரத்தினார்கள்’
  ‘கோழியைத் துரத்திப் பிடிப்பது கஷ்டமான வேலையா?’
  ‘அணில்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடின’

 • 2

  (ஓர் இடத்திலிருந்து) விரட்டுதல்; நீக்குதல்.

  ‘பயிரை மேய்ந்துகொண்டிருந்த மாட்டை அடித்துத் துரத்தினார்’
  ‘வேலைக்காரனை வந்த இரண்டே மாதத்தில் துரத்திவிட்டார் முதலாளி’