தமிழ் துரு யின் அர்த்தம்

துரு

பெயர்ச்சொல்

  • 1

    சில உலோகங்களின் மீது (குறிப்பாக இரும்பின் மீது) காற்றும் தண்ணீரும் படும்போது அவற்றின் வெளிப்புறத்தில் ஏற்படுகிற (வேதியியல் மாற்றத்தின் விளைவாகத் தோன்றுகிற) செம்பழுப்பு நிறப் படிவு.

    ‘துருப்பிடித்த ஆணிகளைத் தூக்கியெறி’
    உரு வழக்கு ‘துருப்பிடித்த சம்பிரதாயங்களால் என்ன பயன்?’