தமிழ் துருத்து யின் அர்த்தம்

துருத்து

வினைச்சொல்துருத்த, துருத்தி

 • 1

  (பை முதலியவற்றிலிருந்து அல்லது ஒரு பரப்பிலிருந்து ஒன்று) வெளியே நீட்டிக்கொண்டிருத்தல்; வெளித்தள்ளிக் காணப்படுதல்.

  ‘பையில் முருங்கைக்காய் துருத்திக்கொண்டிருக்கிறது’
  ‘மணலுக்கு மேல் துருத்தியிருப்பது போல் பாறைகள் தெரிந்தன’
  ‘மெலிந்து காணப்பட்ட மாட்டின் விலா எலும்புகள் துருத்திக்கொண்டு இருந்தன’
  உரு வழக்கு ‘அவருக்குக் கோபம் துருத்திக்கொண்டு வருகிறது’

 • 2

  (நாக்கை) நீட்டுதல்.

  ‘தெருக்கூத்தில் துரியோதனனாக வேடம் போட்டவர் நாக்கைத் துருத்திக்கொண்டு கண்களை அகல விரித்து நன்றாக ஆடினார்’