தமிழ் துருதுரு யின் அர்த்தம்

துருதுரு

வினைச்சொல்துருதுருக்க, துருதுருத்து

  • 1

    (ஒன்றைச் செய்ய வேண்டும் என்று) வேகம் கொள்ளுதல்; துடித்தல்.

    ‘அவரைப் பார்த்ததும் கடுமையாக இரண்டு கேள்வி கேட்க வேண்டும் என்று நாக்கு துருதுருத்தது’
    ‘அந்த அழகான குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்று கைகள் துருதுருத்தன’