தமிழ் துருவம் யின் அர்த்தம்

துருவம்

பெயர்ச்சொல்

 • 1

  பூமியினுடைய அச்சின் வடக்கு அல்லது தெற்கு முனை.

  ‘துருவங்களில் உள்ள பனிமலைகள் வழக்கத்தைவிட அதிகமாக உருகுவதால் பூமியின் வெப்பம் அதிகமாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்’

 • 2

  (காந்தத்தில்) ஈர்ப்பு விசை அதிகமாக உள்ள இரு முனைகளில் ஒன்று.

 • 3

  தன்மை, நிலை, குணம் முதலியவற்றில் எதிரெதிர் நிலை.

  ‘வீட்டில் அப்பாவும் அண்ணனும் எப்போதும் எதிரெதிர் துருவங்கள்தான்’