தமிழ் துருவு யின் அர்த்தம்

துருவு

வினைச்சொல்துருவ, துருவி

 • 1

  (தேங்காய்ப் பருப்பு, கேரட் முதலியவற்றை) தேய்த்து மெல்லிய துகள்களாக விழச் செய்தல்.

  ‘குழம்புக்குப் போடத் தேங்காயைத் துருவு’
  ‘கேரட்டைத் துருவி அல்வா செய்யலாம்’

 • 2

  (ஒன்றைத் தேடுவது, ஆராய்வது, விசாரிப்பது முதலியவற்றின்போது தேவைப்படுவதை) தீவிரத்துடனும் நுணுக்கத்துடனும் கண்டுபிடிக்க அல்லது அறிய முற்படுதல்; குடைதல்.

  ‘நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவனைக் கேள்வி கேட்டுத் துருவினார்’
  ‘மேஜைக்குள் எதைத் துருவித்துருவித் தேடிக்கொண்டிருக்கிறாய்?’