தமிழ் துற யின் அர்த்தம்

துற

வினைச்சொல்துறக்க, துறந்து

  • 1

    (பதவி, பாசம் முதலியவற்றை) வேண்டாம் என்று விட்டுவிடுதல்; கைவிடுதல்.

    ‘சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார்’
    ‘குடிப்பழக்கத்தைத் துறக்கச் சிலரால்தான் முடியும்’