துறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துறை1துறை2

துறை1

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நாட்டின் செயல்பாடுகளில் ஒரு பிரிவு.

  ‘நாட்டில் தொழில் துறை வளர்ச்சி அடைய வேண்டும்’
  ‘பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் வியக்கத் தக்கவை’
  ‘பாதுகாப்புத் துறை அமைச்சர் நாளை சென்னை வருகிறார்’
  ‘தனியார் துறை’

 • 2

  அறிவியலில் ஒரு பிரிவு.

  ‘மொழியியல் துறை’

 • 3

  (அரசு, கல்லூரி முதலியவற்றில்) குறிப்பிட்ட ஒரு பிரிவு.

  ‘சேதம் அடைந்த பாலத்தைப் பொறியியல் துறை வல்லுநர்கள் பார்வையிட்டனர்’
  ‘பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைத் தலைவர்’

துறை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துறை1துறை2

துறை2

பெயர்ச்சொல்

 • 1

  ஆறு, குளம் போன்றவற்றில் உள்ளே இறங்குவதற்கு ஏற்ற வகையில் படிகளுடன் அமைந்திருக்கும் இடம்.

  ‘வண்ணான் துறை’

 • 2

  (ஆற்றில் படகுகளும், துறைமுகத்தில் கப்பல்களும்) பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்வதற்காகக் கரையோரம் வந்து நிற்கும் இடம்.

  ‘படகுத் துறை’
  ‘மீன்பிடித் துறை’