தமிழ் துலக்கு யின் அர்த்தம்

துலக்கு

வினைச்சொல்துலக்க, துலக்கி

 • 1

  (பற்களை) சுத்தம்செய்தல்; (பாத்திரத்தை) (அழுக்கு நீக்கி) பளிச்சிடச் செய்தல்.

  ‘பற்களை நல்ல தரமான பற்பசை கொண்டு துலக்க வேண்டும்’
  ‘ஒரு காலத்தில் பல் துலக்கவும் பாத்திரம் துலக்கவும் சாம்பல்தான் உபயோகித்தார்கள்’
  ‘வெள்ளிக்கிழமை என்றால் பூஜைப் பாத்திரங்களைத் துலக்கி வைப்பார்’

 • 2

  தெளிவாகப் புலப்படச் செய்தல்.

  ‘பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள வேறுபாட்டை இந்தக் கட்டுரை துலக்குகிறது’
  ‘காட்டினுள் தீப்பந்த வெளிச்சம் வழி துலக்கிச்சென்றது’