தமிழ் துலங்கு யின் அர்த்தம்

துலங்கு

வினைச்சொல்துலங்க, துலங்கி

 • 1

  (ஒன்று) தெரியவருதல்; வெளிப்படுதல்.

  ‘எல்லோரும் என்மேல் சந்தேகப்படுகிறார்கள். இருந்தாலும் உண்மை ஒரு நாள் தானாகத் துலங்கும்’
  ‘அவர் எதற்காக இப்படி ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தார் என்ற மர்மம் எனக்குத் துலங்கவில்லை’
  ‘அவரிடம் நிதானமும் நாணயமும் துலங்கக் காண்கிறோம்’
  ‘தொழிலதிபர் கொலை வழக்கில் இன்னும் துப்புத் துலங்கவில்லை’

 • 2

  பிறர் உணரும் வகையில் எடுப்பாகவும் தெளிவாகவும் அமைதல்.

  ‘நெற்றியில் திருநீறு துலங்கப் பூஜை அறையிலிருந்து அவர் வெளியே வந்தார்’
  ‘கற்பனை துலங்க அவர் அளித்த தோடி ராகம் சபையினரை மெய்மறக்கச் செய்தது’

 • 3

  நல்ல நிலையை அடைதல்; உருப்படுதல்.

  ‘இப்படித் தறுதலையாகச் சுற்றுபவன் எங்கே துலங்கப்போகிறான்?’
  ‘‘சாயங்காலத்தில் படுத்துத் தூங்கினால் வீடு துலங்குமா?’ என்று அம்மா திட்டினாள்’
  ‘மருமகள் வந்த பிறகுதான் அவர் வீடு துலங்கிற்று’