தமிழ் துள்ளு யின் அர்த்தம்

துள்ளு

வினைச்சொல்துள்ள, துள்ளி

 • 1

  சற்று விரைவாக மேலெழும்பிக் கீழே வருதல்.

  ‘கன்றுக்குட்டி துள்ளும் அழகே அழகு’
  ‘தொட்டியிலிருந்த மீன் துள்ளி வெளியே விழுந்தது’
  ‘‘குழந்தை துள்ளும்; நன்றாகப் பிடித்துக்கொள்’’

 • 2

  பேச்சு வழக்கு (திமிர் கொண்டு) அடக்கம் இல்லாமல் நடந்துகொள்ளுதல்.

  ‘‘சும்மா துள்ளாதே. அடங்கிப்போய்விடுவதுதான் உனக்கு நல்லது’ என்றார்’

 • 3

  பேச்சு வழக்கு (ஒருவரிடம் பணம்) அதிகமாகப் புழங்குதல்.

  ‘கையில் காசு துள்ளுகிறது போலிருக்கிறதே!’