தமிழ் துளி யின் அர்த்தம்

துளி

பெயர்ச்சொல்

 • 1

  முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்; சொட்டு.

  ‘தாமரை இலையின் மேல் பனித் துளிகள்’
  ‘கண்ணீர் துளிகளாக உருண்டோடியது’
  ‘நெற்றியிலிருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்தான்’

 • 2

  மிகச் சிறிய அளவு.

  ‘துளியானாலும் விஷம், விஷம்தானே’
  ‘பணத்தின் மீது எனக்குத் துளி ஆசைகூடக் கிடையாது’
  ‘அவர்மீது எனக்குத் துளியும் சந்தேகம் கிடையாது’