துளிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துளிர்1துளிர்2

துளிர்1

வினைச்சொல்துளிர்க்க, துளிர்த்து

 • 1

  (மரம், செடி முதலியவற்றில்) இலை தோன்றுதல்; தளிர்த்தல்/(மண்ணிலிருந்து) முளை தோன்றுதல்; முளைத்தல்.

  ‘ரோஜாச் செடி துளிர்க்க ஆரம்பித்துவிட்டது’
  ‘பட்டுப்போன கிளை துளிர்க்க நாளாகலாம்’
  ‘சில வகை மரங்கள் வெட்டவெட்டத் துளிர்த்துக்கொண்டேயிருக்கும்’
  உரு வழக்கு ‘மனத்தில் நம்பிக்கை துளிர்த்தது’

 • 2

  (ஓரிடத்தில் நீர் முதலியவை) குறைந்த அளவில் திரளுதல்.

  ‘கண்களில் நீர் துளிர்க்க எனக்கு விடைகொடுத்தாள்’
  ‘புல் நுனியில் துளிர்த்திருந்த பனித் துளி’

 • 3

  பேச்சு வழக்கு (மரியாதை, பணிவு இல்லாமல் நடக்கும் அளவுக்கு) துணிவு ஏற்படுதல்.

  ‘அப்பாவை எதிர்த்துப் பேசும் அளவுக்கு உனக்குத் துளிர்த்துவிட்டதா?’

துளிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துளிர்1துளிர்2

துளிர்2

பெயர்ச்சொல்

 • 1

  முளைக்கும் இலை; தளிர்.

  ‘துளிர் வெற்றிலை’