துளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துளை1துளை2

துளை1

வினைச்சொல்துளைக்க, துளைத்து

 • 1

  (ஒன்று) சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்; துவாரம் உண்டாக்குதல்.

  ‘வண்டு மாம்பழத்தைத் துளைத்திருக்கிறது’
  ‘குண்டு மார்பைத் துளைத்துக்கொண்டு சென்றிருந்தது’

 • 2

  (ஒன்றைக் கேட்டு) மிகவும் தொந்தரவு செய்தல்.

  ‘அடிக்கடி பணம் கேட்டுத் துளைக்காதே!’
  ‘குழந்தை இரண்டு நாட்களாகப் பொம்மை கேட்டுத் துளைத்துக்கொண்டிருக்கிறது’

துளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

துளை1துளை2

துளை2

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் வட்ட வடிவில் ஏற்படுத்தப்படும்) சிறிய இடைவெளி அல்லது திறப்பு.

  ‘இந்தக் கட்டையில் நான்கு துளைகள் போடு’
  ‘குழாய் இறக்குவதற்குப் பெரிய துளை போட வேண்டும்’

 • 2

  ஓட்டை.

  ‘கடிதங்களைத் துளை போட்டு ஒரு கம்பியில் மாட்டி வை’