தமிழ் துழாவு யின் அர்த்தம்

துழாவு

வினைச்சொல்துழாவ, துழாவி

 • 1

  (கண்ணுக்கு எளிதில் புலப்படாத இடத்தில் அல்லது இருட்டில் உள்ள பொருளைக் கையால் அல்லது காலால்) தடவி அறிதல்.

  ‘இருட்டில் கையால் துழாவி மின்விளக்கைப் போட்டான்’
  ‘பைக்குள் கை விட்டுத் துழாவிப் பாக்கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்’
  ‘மேஜையின் அடியில் பேனா விழுந்திருக்கிறதா என்று காலால் துழாவிப் பார்த்தான்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காகக் கண்கள்) தேடுதல்.

  ‘கூட்டத்தில் அவள் எங்கு நிற்கிறாள் என்று அவனுடைய கண்கள் துழாவின’