தமிழ் துவக்கு யின் அர்த்தம்

துவக்கு

வினைச்சொல்துவக்க, துவக்கி

 • 1

  தொடங்குதல்; ஆரம்பித்தல்.

  ‘காலையிலேயே விற்பனையைத் துவக்கிவிட்டேன்’
  ‘சாப்பிட்டு முடித்ததும் சரியாக இரண்டு மணிக்கு வேலையை மறுபடியும் துவக்கினோம்’
  ‘அவர் புதிதாக ஒரு பத்திரிகை துவக்கினார்’
  ‘பாடகர் சரியாக ஆறு மணிக்குக் கச்சேரியைத் துவக்கினார்’

தமிழ் துவக்கு யின் அர்த்தம்

துவக்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு துப்பாக்கி.